search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு

    தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம்.

    தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்ச கட்டணம் என்பதால் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×