என் மலர்

  செய்திகள்

  கமல் ஹாசன்
  X
  கமல் ஹாசன்

  சென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படுத்தும் விதமாக ‘நாமே தீர்வு’ என்ற திட்டத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கையில் எடுத்துள்ளார்.

  சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றுதான் இருக்க வேண்டும். அது கொரோனாவில் தலைநகராக இருந்து விடக்கூடாது என்றார்.

  மேலும், நாமே தீர்வு குறித்து கமல் கூறுகையில் ‘‘எங்கள் கட்சி ‘நாமே தீர்வு’ என்ற புது முயற்சியை மேற்கொள்கிறது. இது அரசு அல்லாத அமைப்பாகும். தனிப்பட்டவர்கள், மற்றவர்கள் இதில் தானாகவே வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

  இந்த திட்டம் மக்களாலும், மக்களுக்காகவும்.

  லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள், தற்போது அவர்களை பாதுகாப்பது முக்கியமானது. மக்கள் அடிக்கடி அதிகமாக கூடும் இடங்களில் சானிடைசர் வைக்கப்படும். அதேபோல் முகக்கவசங்கள் வழங்கப்படும்.

  எங்கள் கட்சியின் இந்த திட்டம் மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ எதிரானது அல்ல. தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
  Next Story
  ×