என் மலர்
செய்திகள்

மின்சாரம் நிறுத்தம்
உக்கடத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
உக்கடத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோவை:
கோவை மின் பகிர்மான வட்டம் உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது .
அதன்படி உக்கடம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், முனிசாமி நகர், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், அரசு மருத்துவமனை,உக்கடம் லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Next Story