search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தயாரான ஆடைகள் லாரியில் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்
    X
    திருப்பூரில் தயாரான ஆடைகள் லாரியில் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்

    திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்படும் பின்னலாடைகள்

    திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொழிலை ஏராளமானவர்கள் தேர்ந்தெடுத்து செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.

    ஊரடங்கின் காரணமாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த 2 மாதத்திற்கு மேல் இயங்கவில்லை. இதன் பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதியில் இருந்து இயங்க தொடங்கியது. தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அனுப்பிவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல மாநிலங்களில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து பலரும் ஆடைகளுக்கான ஆர்டர்களை கொடுத்தார்கள். அதன்படி அந்த ஆடைகளையும் தயாரித்து அனுப்பிவருகிறோம். தற்போது குஜராத், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடைகள் லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் மேலும் ஆடை வர்த்தகம் சூடுபிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×