search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கொரோனா தொற்று

    சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நிர்வாக அலுவலகம் 7-ந் தேதி வரை மூடப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகம் விமான நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்தது. 3 தளங்கள் கொண்ட இந்த அலுவலகம் கட்டிடத்தின் 2வது தளத்தில் மின்சார பராமரிப்பு, அக்கவுண்டஸ், சிவில் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.

    இந்தநிலையில் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

    இதையடுத்து 2வது தளத்தில் உள்ள 3 பிரிவுகளும் நேற்று மாலையில் இருந்து 7ந் தேதி வரை மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய நிர்வாக அலுவலகம் முழுவதையுமே தற்காலிகமாக மூடி கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் சென்னை விமான நிலைய ஆணையக டிரைவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    Next Story
    ×