என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  அனுப்பானடியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை அனுப்பானடி சுடுகாட்டு பகுதியில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் போலீசாருடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

  அப்போது அனுப்பானடி சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 2 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் மணிகண்டன் (வயது 21) மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

  அவனியாபுரம் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மேற்கண்ட 2 பேரும் அனுப்பானடியை சேர்ந்த சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக சுடுகாட்டு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

  இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×