search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தில் சிக்கல்

    சாரல் மழையே பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைவாக உள்ளது.
    கூடலூர்:

    கேரள பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 1-ந் தேதி கேரளாவில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.

    நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சாரல் மழையே பெய்து வருவதால் அணைக்கு 125 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 112.75 அடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 125 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 38.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.55 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 62.64 அடி. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. பெரியாறு 12.2, தேக்கடி 24.2, கூடலூர் 7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×