search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    கோவையில் மருத்துவ மாணவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று

    கோவையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து வந்த மருத்துவ மாணவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கோவையை சேர்ந்த வாலிபர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது. சென்னை, டெல்லி, பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்த 21 பேர் கொரோனா பாதிப்புடன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக வந்த மலுமச்சம்பட்டியை சேர்ந்த மருத்துவ மாணவி, செல்வபுரத்தை சேர்ந்த 24 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல சென்னை பட்டாபிராமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த உக்கடத்தை சேர்ந்த 28 வயது வாலிபர், கார் மூலமாக கோவை வழியாக கேரள மாநிலம் மலப்புரத்துக்கு சென்ற 44 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா அறிகுறியுடன் 13 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 ஆண்கள், 5 பெண்கள். இவர்களில் 12 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×