search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற 2 பேர் கைது

    கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிங்காநல்லூர்:

    கோவை ராமநாதபுரம் திருச்சி மெயின் ரோட்டில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் மசாஜ் தெரபிஸ்ட்டாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வேலை பார்க்கும் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டார். இதுகுறித்த தகவல் அந்த பெண்ணுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பெண் தனது கடை உரிமையாளர்களான டேரான், சிசில் அந்தோணி ஆகியோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை ஊருக்கு அனுப்ப முடிவு செய்தனர். அப்போது தான் அந்த பெண்ணின் விசா காலம் முடிவடைந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டேரானும், சிசில் அந்தோணியும் சேர்ந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து சென்னையில் உள்ள வெளிநாட்டு பயணிகள் தூதரகத்தில் பதிவு செய்தனர்.

    அப்போது அதிகாரிகள் அந்த ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் அவை போலியானவை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து டேரான் மற்றும் சிசில் ஆனந்திடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது தான் என ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேரான் மற்றும் சிசில் அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×