என் மலர்

  செய்திகள்

  வழக்குகள் பதிவு
  X
  வழக்குகள் பதிவு

  திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 472 பேர் மீது வழக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 472 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  திருவண்ணாமலை:

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 472 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 216 மோட்டார் சைக்கிள்கள், 7 ஆட்டோக்கள், 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 224 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 71 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 ஆயிரத்து 906 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

  மேலும் 31 ஆயிரத்து 797 இருசக்கர வாகனங்கள், 103 ஆட்டோ, 170 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  Next Story
  ×