என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் மர்மமரணம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டி அருகே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது அக்காள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள செக்குமேடு பகுதியில் வசித்து வருபவர். ராஜா, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஹேமாவதி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

  நேற்று மாலை வீட்டில் இருந்த ஹேமாவதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார் ஹேமாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

  இந்த நிலையில் ஹேமாவதியின் அக்காள் சுஜாதா, தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். ஹேமாவதிக்கும் அவரது கணவர் ராஜாவிற்கும் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே சண்டை இருந்து வந்தது. தங்கையின் சாவில் மர்மம் உள்ளதால் அவரது கணவர் ராஜாவிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

  இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×