search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு எழுதும் மாணவிகள் (கோப்புப்படம்)
    X
    தேர்வு எழுதும் மாணவிகள் (கோப்புப்படம்)

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட இருக்கிறது. அதை மாணவர்கள் எப்படி பெறலாம் என்பதுகுறித்து பார்ப்போம்...
    சென்னை:

    கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், பிளஸ்-1 இறுதிநாள் தேர்வும், அதேபோல், பிளஸ்-2 இறுதிநாள் தேர்வில் பங்கேற்காதவர்களுக்குமான தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறையின் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால்,
    www.dge.tn.gov.in
    என்ற இணையதளத்துக்கு சென்று தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவுசெய்தும் ‘ஹால் டிக்கெட்டை’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) 4-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

    தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய ஹால் டிக்கெட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ வீட்டிற்கே வந்து வழங்கப்படும். பள்ளிக்கு சென்று ஹால் டிக்கெட் பெறும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×