என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கோவையில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை மலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது31).

  இவருக்கும் வெள்ளலூர் பட்டணம் ரோடு பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவரின் மகள் கிறிஸ்டினா(27) என்பவருக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

  இந்த நிலையில் நேற்று கிறிஸ்டினா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிறிஸ்டினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமான 7 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

  Next Story
  ×