என் மலர்

  செய்திகள்

  குடிநீர்
  X
  குடிநீர்

  நிலக்கோட்டையில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் சமூக இடைவெளி கேள்விக்குறி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டையில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் சமூகஇடைவெளி கடைபிடிக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

  நிலக்கோட்டை:

  கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு சமூகஇடைவெளியை கடைபிடித்து வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்லவேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையில் நூத்துலாபுரம் ஊராட்சி சீத்தாபுரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

  பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இந்த ஊருக்கு பொதுக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வழங்கப்படுவதால் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று தண்ணீர் பிடிக்கின்றனர்.

  மேலும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. இதனால் நோய்த்தொற்று அபாயம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் ஒவ்வொரு தெருவிற்கும் குழாய் அமைத்து குடிநீர் வழங்கவேண்டும். பாதியில் நிறுத்தப்பட்ட போர்வெல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  Next Story
  ×