என் மலர்

  செய்திகள்

  வரதட்சணை கொடுமை
  X
  வரதட்சணை கொடுமை

  பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை- வக்கீல் உள்பட 4 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வக்கீல் உள்பட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றார்.
  திருக்கோவிலூர்:

  திருக்கோவிலூர் அருகே கச்சிகுவச்சான் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பார்த்தசாரதி (வயது 33). வக்கீல். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (28). இந்த நிலையில் பார்த்தசாரதி தனது மனைவி ஜெயப்பிரியாவிடம் உனது பெற்றோரிடம் சென்று வரதட்சணையாக ரூ.2 லட்சம், 10 பவுன் நகை வாங்கி வருமாறு கூறி கொடுமைபடுத்தி வந்தாக தெரிகிறது.

  சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார்த்தசாரதி, தனது தாய் சரஸ்வதி, அண்ணன் குமார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து ஜெயப்பிரியாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் ஜெயப்பிரியாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பார்த்தசாரதி உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
  Next Story
  ×