என் மலர்

  செய்திகள்

  துரைமுருகன்
  X
  துரைமுருகன்

  திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்- மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  சென்னை:

  தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்தவர் க.அன்பழன். அவர் மார்ச் மாதம் சென்னையில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவியாகும்.

  திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் ஆகியோர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ள நிலையில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 29ம் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  ஆனால் கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திமுகவின் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.

  இந்நிலையில் இன்று பொதுக்குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  கொரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனின் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
  Next Story
  ×