search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணமக்கள் உஷாநந்தினி-லோகேந்திரன்.
    X
    மணமக்கள் உஷாநந்தினி-லோகேந்திரன்.

    ஊரடங்கு நீட்டிப்பால் கோவிலில் எளிமையாக நடந்த அரசு பெண் ஊழியர் திருமணம்

    ஊரடங்கு நீட்டிப்பால் கோவிலில் வணிகவரித்துறை பெண் ஊழியர் ஒருவரின் திருமணம் எளிமையாக நடந்தது.
    திருச்சி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசு விதி முறைக ளின்படி சமூக இடை வெளியை பின்பற்றி எளிமையான முறை யில் திருமணங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, நேற்று வணிகவரித்துறை பெண் ஊழியர் ஒரு வரின் திருமணம் எளிமையாக நடந்தது.

    திருச்சி விமான நிலையம் அம்பிகை நகர் பகுதியை சேர்ந்த லோகேந்திரனுக்கும், வணிக வரித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் மண்ணச்சநல்லூரை சேர்ந்த உஷாநந்தினிக்கும் திருமணம் வயலூர் முருகன் கோவிலிலும், திருமண வரவேற்பு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தடபுடலாக நடைபெறும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப் பட்டு இருந்தது.

    ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிச்சயிக்கப்பட்ட தேதியான நேற்று அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, திருமணத்தை எளிமையாக நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் லோகேந் திரன்-உஷாநந்தினி திருமணமும், தொடர்ந்து பெண் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் எளிமையாக நேற்று நடைபெற்றது.

    அப்போது, திருமணத்தில் பங்கேற்றோருக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது. அவர்கள், சமூக இடைவெளி விட்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதேபோல அப்பகுதியில் மட்டும் மேலும் 2 திருமணங்கள் நடை பெற்றன.
    Next Story
    ×