என் மலர்

  செய்திகள்

  உபேர் கால் டாக்சி
  X
  உபேர் கால் டாக்சி

  சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கிய நிலையில் உபேர் நிறுவனம் சென்னையில் கால் டாக்சி சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின. கால் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான உபேரும் சேவையை நிறுத்தியது.

  கடந்த மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதனால் விமான நிலையத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில் நேற்றில் இருந்து ஆட்டோ, கால் டாக்சி போன்றவைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல சேவையை தொடங்கியுள்ளோம். பாதுகாப்பான பயணத்திற்கு எங்களை அழைக்கலாம் என உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பயணம் செய்ய விரும்புவோர்கள் UberGo, Uber Premier and Uber XL மூலம் அனுகலாம். அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

  இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டல உபேரின் தலைவர் ரத்துல் கோஷ் கூறுகையில் ‘‘நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து விமான நிலையத்திற்கு மீண்டும் சேவையை தொடங்கியதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்.

  டிரைவர்கள் வருவாய் ஈட்ட இது நல்ல வாய்ப்பு. எங்களது டிரைவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியற்றை உறுதி செய்யும் வகையில் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்ந்து பணிபுரிவோம்’’ என்றார்.
  Next Story
  ×