என் மலர்

  செய்திகள்

  கடத்தல்
  X
  கடத்தல்

  ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி கடத்தல்?- தந்தை போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  ஒரத்தநாடு:

  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் கிளாமங்கலம் கிராமம் குஞ்சையன் தெருவை சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள், பிளஸ் 1 படித்து வந்தார்.

  இவர் நேற்றுமுன்தினம் தோழி வீட்டிற்கு போய் வருவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தந்தை பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு ஊரணிபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் பழனி என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், மாணவியை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரியவந்தது.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Next Story
  ×