search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    சென்னையில் கணவருடன் வசித்து வந்த 26 வயது இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

    தேனி மாவட்டம் கூடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, 5 வயது சிறுவன், கம்பத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், 65 வயது முதியவர், சின்னமனூரை சேர்ந்த 54 வயது பெண் என மொத்தம் 5 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கூடலூரை சேர்ந்த மூதாட்டி மற்றும் குழந்தை ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருந்து வந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    கம்பத்தை சேர்ந்த வாலிபர் மற்றும் முதியவர், சின்னமனூரை சேர்ந்த பெண் ஆகியோர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் முத்துலாபுரத்தை சேர்ந்த முதியவர் மற்றும் 2 குழந்தைகள், தேனி கோவிந்தன்நகரை சேர்ந்த சிறுவன், தேனியை சேர்ந்த பெண் என மொத்தம் 5 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    Next Story
    ×