என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூரில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓசூரில் கட்டையால் பெண்ணை அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 36). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி அஸ்வினி (29). இவர்கள் 2 பேரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சாதிக் (12), முபாரக் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலையும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுஸ்பாஷா, அஸ்வினியை கட்டையால் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுஸ்பாஷாவை கைது செய்தனர். காதலித்து திருமணம் செய்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×