search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர்ந்து இயங்கும் காய்கறி மார்க்கெட்

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் ஜானகி புரத்தில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் அந்த பணிகள் முடிந்த பின்னர் அங்கு மாற்றப்படும். இதனால் புதிய பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் தொடர்ந்து இயங்கும் என்று நகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதும் காரணத்தினாலும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த காரணத்தினால் விழுப்புரத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டு வந்த உழவர் சந்தை, நகராட்சி பள்ளி மைதானத்திலும், பாகர்ஷா தெருக்களில் இயங்கி வந்த மொத்த விலை மார்க்கெட்டுகள் புதிய பஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டது. மேலும் சிலரை காய்கறி கடைகள், மீன் கடைகள் பழைய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

    ஜூன் 1-ந் தேதி முதல் அரசு பஸ் மற்றும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. எனவே 2 பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி சந்தைகள் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சந்தைகள் மாற்றப்படாமல் பஸ் நிலையத்திலேயே தொடர்ந்து இயங்கியது. இதனால் ஒரு பகுதியில் காய்கறிச் சந்தையும் மறுபகுதியில் பஸ்களும் இயங்கி வருகின்றன.ஆனால் போக்குவரத்து நெரிசலான காணப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவது:-பழைய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் நகராட்சி பள்ளி மைதானத்தில் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் ஜானகிபுரம் சிப்காட் பகுதிக்கும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.ஆனால் இன்று வழக்கம் போல பழைய பஸ் நிலையத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் காய்கறி கடைகள் இயங்கி வந்தன.

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் ஜானகி புரத்தில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் அந்த பணிகள் முடிந்த பின்னர் வியாழக்கிழமை அங்கு மாற்றப்படும். இதனால் புதிய பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் காய்கறி சந்தையும், மறுபகுதியில் பஸ் போக்குவரத்தும் இயங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×