என் மலர்

  செய்திகள்

  பொதுமக்கள் கீதா எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
  X
  பொதுமக்கள் கீதா எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டபோது எடுத்த படம்.

  அடிப்படை வசதிகள் கேட்டு கீதா எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்
  கரூர்:

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கீதா நேற்று சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சுக்காம்பட்டிபுதூர், கீழடை, சேங்கல், சின்னசேங்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது சேங்கல் ஊராட்சி, முத்துரங்கம்பட்டி பொதுமக்கள் திரண்டு வந்து, அடிப்படை வசதிகள் கேட்டு கீதா எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை வைத்தும் பலனில்லை.

  இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணம் வழங்க வருவதாக எம்.எல்.ஏ. கூறியிருந்தார். இதனால் நாங்கள் அவருக்காக காத்திருந்தோம். ஆனால் திடீரென ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எம்.எல்.ஏ. வந்து 2 நபர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி விட்டு சென்று விட்டார். இதனால் நாங்கள் அவரிடம் கோரிக்கை மனுவை அளிக்க முடியவில்லை. எனவே தற்போது ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார், என்று பொதுமக்கள் கூறினர்.

  இதையடுத்து கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  இதேபோல, மகாதானபுரம் ஊராட்சி பகுதிக்கு சென்ற கீதா எம்.எல்.ஏ.வை உள்ளே வர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்று விட்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வும் இப்பகுதிக்கு வரவில்லை, என்றனர்.

  இதேபோல கம்மநல்லூர் ஊராட்சி பகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ.வை அப்பகுதி பொதுமக்கள் உள்ளே வர எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதிக்கு மனுக்கள் வாங்க சென்ற எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதாலும், உள்ளே வர அனுமதி மறுத்ததாலும் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×