என் மலர்

  செய்திகள்

  உயிரிழப்பு
  X
  உயிரிழப்பு

  திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
  திருக்கோவிலூர்:

  திருக்கோவிலூர் அருகே பழங்கூர்காலனியை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தபோது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கொளஞ்சி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்த தகவின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
  Next Story
  ×