search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    115 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78 லட்சம் சிறப்பு கடனுதவி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

    கொரோனா சிறப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் 115 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78 லட்சம் சிறப்பு கடனுதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கொரோனா சிறப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடனுதவி வழங்கி பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதல்- அமைச்சர் மருத்துவ நிபுணர்கள், ஆலோசனைபடி பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இந்த ஊரடங்கு காலங்களில் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    கொரோன வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக தொழில்களைத் தொடங்கவும் தமிழ்நாடு ஊரகப்புத்தாக்க திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்திற்கு ஊரக் தொழில் மேம்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டங்களின் மூலமாக கொரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரித்தல், கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டிற்காக இச்சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் ஊரகப் பொருளாதார வளர்ச்சியும், ஊரக தொழில்களில் எழுச்சியும், மக்கள் வருமானத்தில் முன்னேற்றமும் ஏற்படும்.

    மதுரை மாவட்டத்திலுள்ள சுயஉதவி குழுக்கள் இந்த ஊரடங்கு காலங்களில் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை தயாரித்தது இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கடனுதவியை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு இந்த சமுதாயத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 10 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26.25 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 105 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.52.50 லட்சம் மதிப்பிலும் கொரோனா சிறப்பு கடனுதவியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×