என் மலர்

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பணம் பெற்றுக் கொண்டு உணவுகளை வழங்க வேண்டும் என்று சுய உதவிக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலையில் காலை, மதியம், இரவு உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை - எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்‌ஷய பாத்திரமாக விளங்கியது.

    கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதற்கான உணவுக்கான செலவீனத்தை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கின.

    ஏப்ரல் 23-ந்தேதி முதல் மே 17-ந்தேதி வரையிலும், மே 20 முதல் 28-ந்தேதி வரையிலும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 1 கோடியே 36 லட்சம் பேர் ஊரடங்கு காலத்தில் இதன் மூலம் பயனடைந்தனர்.

    அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கிய செலவுகளுக்காக 3 கோடியே 84 லட்ச ரூபாய் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று முதல் அம்மா உணவகங்களில் பணம் பெற்றுக் கொண்டு உணவுகளை வழங்க வேண்டும் என்று சுய உதவிக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று முதல் மூன்று வேலையும் உணவிற்கு பணம் பெறப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு இன்று முதல் பணம் பெறப்படும் என்றார்.

    இதுவரையில் உணவு இலவசமாக வழங்கப்பட்டதால் இன்றும் பலர் இலவசமாக பெறுவதற்காக வந்தனர். ஆனால் விலை கொடுத்து பெற வேண்டும் என்று கூறப்பட்டதால் ஒரு சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கே.கே.நகரை சேர்ந்த சினிமா தொழிலாளி சுரேஷ் என்பவர் கூறியதாவது:-

    இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் சினிமா தொழில் முடங்கியதால் இதை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும், கலைஞர்களும் மிகவும் பாதிப்பு அடைந்தனர்.

    எங்களுக்கு கிடைத்த ஆறுதலாக அம்மா உணவகத்தில் இதனால் வரையில் கட்டணம் இல்லாத உணவு கிடைத்தது. ஊரடங்கு மே மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஊரடங்கு முடியும் வரை மீண்டும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×