search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திருமழிசை மார்க்கெட்டில் நடைபாதையில் பொருட்களை வைத்தால் கடைகள் பறிமுதல்- கலெக்டர் எச்சரிக்கை

    திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் பொது மக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைக்கும் உரிமையாளர்களின் கடைகள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    திருவள்ளூர்:

    திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, வடக்கு மண்டல காவல் துறை தலைவர் பொ.நாகராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    திருமழிசை சந்தைக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்து பொருட்களையும் இறக்கியவுடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

    அவ்வாறு தவறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, பொது மக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைக்கும் உரிமையாளர்களின் கடைகள் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் சமூக இடைவெளியினை முழுமையாக கடைபிடிக்காத உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரது மீதும் அபராதங்கள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×