என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
  சென்னை:

  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 12,757 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 173-ஆக உள்ளது.
   
  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.

  இந்நிலையில் சென்னையில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

  கோயம்பேட்டை சேர்ந்த 69 வயதான முதியவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  திருவல்லிக்கேணி சாந்தி தெருவை சேர்ந்த 42 வயதான நபர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையில் 69 வயது மற்றும் 57 வயதான நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
  Next Story
  ×