search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது.
    சென்னை:

    தி.மு.க. சார்பில் 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று மாலை திமுக தோழமைக் கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்தி வருகிறார்.   ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும்  திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை  நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காணொலி காட்சியில் காங்., இடதுசாரி கட்சிகள், மதிமுக, விசிக, கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×