search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    பாபநாசத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    பாபநாசத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாபநாசம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கட்டமைப்பு சார்பில் பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயத்திற்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த சட்டம் 2010ஐ ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

    ஆறு, ஏரி, குளம் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாய சங்க பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சாமு.தர்மராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன், மாவட்ட குழு உறுப்பினர் கஸ்தூரிபாய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மாலதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள், விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் தங்கராசு. ஒன்றியகுழு உறுப்பினர்கள் இளங்கோவன், கார்த்தி, பத்மநாபன், ராமகிருஷ்ணன், மணிவேல், சீனிவாசன், சேக்அலாவுதீன், உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×