search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பெண் குழந்தை விற்ற விவகாரம்- தந்தை உள்பட 6 பேர் மீது வழக்கு

    மதுரையில் பெண் குழந்தையை விற்ற விவகாரத்தில் தந்தை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மதரசாவில் பராமரிக்க அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை பெற்றோருக்கு தெரியாமல் விற்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் வினய்க்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

    நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் அ‌ஷரப்அலி (வயது40). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். காதல் திருமணம் செய்த இந்த ஜோடி கருத்து வேறுபாடால் பிரிந்தது. குழந்தைகளை கணவரிடம் விட்டு விட்டு நிர்மலா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இநத நிலையில் வறுமையில் வாடிய அ‌ஷரப்அலி தனது மகளை மதுரையில் உள்ள மதரசாவில் பராமரிக்க முடியுமா? என தனது நண்பர் அசன்முகமது என்பவரிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு குழந்தை அசன்முகமது வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அவ்வப்போது குழந்தையை மதுரை வந்து பார்த்து சென்ற அ‌ஷரப் அலி, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக மதுரை வர முடியவில்லை. இதனால் குழந்தையிடம் போனில் பேச முயன்றபோது அசன் முகமது சரியாக பதிலளிக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அ‌ஷரப்அலி மதுரை வந்தபோது தனது குழந்தை ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

    கோவில்பட்டியை சேர்ந்த அப்துல்ரசாக்-நிஷா தம்பதியினர் குழந்தையை பெற்று சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தை விற்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை விற்பனைக்கு நிஷாவின் உறவினர் பாத்திமா, அசன் முகமது, அவரது தோழி மெகருன்னிஷா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கோவில்பட்டி அப்துல் ரசாக்-நிஷா, பாத்திமா, அசன் முகமது, மெகருன்னிஷா மற்றும் குழந்தையின் தந்தை அ‌ஷரப்அலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×