search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

    அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி ஜூன் 15-ந்தேதி தொடங்கும்.

    தனியார் நிறுவனம் மூலம் 4 நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணைய வழி வகுப்பு நடைபெறும்.

    இதுதொடர்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×