search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    6 நாள் விசாரணைக்கு பிறகு காசி மீண்டும் சிறையில் அடைப்பு

    6 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு காசி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காசி மீது நாகர்கோவில் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காசியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே காசியால் பாதிக்கப்பட்ட நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் புகார் அளித்தார். மேலும், கந்துவட்டி வழக்கும் அவர் மீது பதிவாகியது. இப்படி காசி மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவானதை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஆகியோரிடம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு காதலிப்பதாக கூறி தனது லீலைகளை காட்டியது விசாரணையில் அம்பலமானது. மேலும், அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதற்கிடையே காசியின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்ததில், பல கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள் பலருடன் அவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்கனவே காசி மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காசி மீது போக்சோ வழக்கும் பாய்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக காசியை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் 2.30 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசியை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நீதிபதி அருள்முருகன் முன்பு ஆஜர்படுத்தினர். அதற்கு முன்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காசிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதைத்தொடர்ந்து காசியை மீண்டும் போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×