search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை (கோப்பு படம்)
    X
    ரேசன் கடை (கோப்பு படம்)

    ஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்- இலவச பொருட்கள் விநியோகம்

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29-ம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

    அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளுக்கு ஜூன் 5-ம் தேதி, முதல் வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ரேசன் கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஜூன் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேசன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×