search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை

    சென்னையில் இன்று மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒருவர் தற்கொலை கொண்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×