search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
    X
    மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    திருவள்ளூர் அருகே கொரோனா பாதித்த பகுதியில் திறந்த மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    பல்வேறு இடங்களில் இருந்து மதுப்பிரியர்களால் அப்பகுதிக்கு வந்து செல்வதால் கொரோனா தொற்று மேலும் ஏற்படும் என்பதால் இந்த 2 மதுக்கடைகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் 83 மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.  சென்னை போலீஸ்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடை திறக்கப்படாததால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பரவிய காக்களூர் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்பு 2  மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

    இந்த பகுதியில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த பகுதியில் மட்டும் மேலும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பல்வேறு இடங்களில் இருந்து மதுப்பிரியர்களால் அப்பகுதிக்கு வந்து செல்வதால் கொரோனா தொற்று மேலும் ஏற்படும் என்பதால் இந்த 2 மதுக்கடைகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, வில்லிவாக்கம், கடம்பத்தூர், சோழவரம்  பகுதிகளைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    Next Story
    ×