search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
    X
    அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    3 ஆயிரம் குடும்பத்திற்கு 30 டன் அரிசி- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

    ஆரணி சேவூரில் 3 ஆயிரம் குடும்பத்திற்கு 30 டன் அரிசியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் ஓசூரம்மன் கோவில் வளாகத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தன்னுடைய சொந்த கிராமத்தில் உள்ள சுமார் 3 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசி மூட்டையை பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து சேவூர் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் ரகுநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் வீடுவீடாக சென்று அமைச்சரின் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணை தலைவர் பாரிபாபு, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சேகர், வேலு, மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராசன், கவுரி, ராதாகிருஷ்ணன், பூங்கொடி, திருமால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், பெருமாள், ஊராட்சி மன்ற துணை தலைவர் குமரவேல், பீமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    Next Story
    ×