search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தளவாய்சுந்தரம்
    X
    தளவாய்சுந்தரம்

    அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்

    குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 1065 பேருக்கு கொரோனா நிவாரண உதவிகளை தளவாய்சுந்தரம் வழங்கினார்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி அ.தி.மு.க சார்பில், 100 ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணமாக, காய்கறிகள், மசாலா பொருட்கள் மற்றும் இனிப்புகளை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.

    தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுகிராமத்தில், 75 ஏழை, எளிய பொதுமக்களுக்கு, கொரோனா சிறப்பு நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

    குலசேகரபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 300 ஏழை, எளிய பொதுமக்களுக்கு, பல்பநாபன்புதூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா சிறப்பு நிவாரணமாக தலா 5 கிலோ அரிசியும், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தடைசெய்யப்பட்ட பகுதியிலுள்ள 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களையும் தளவாய்சுந்தரம் வழங்கினார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, ஆற்றூர் ஒயிட் நினைவு மருத்துவகல்லூரி, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக, பொதுமக்களுக்கு ஆர்சனிக் மாத்திரைகளை, அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.

    புத்தளம் பேரூர் கழகம் சார்பாக, புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கன் குடியிருப்பு பகுதியினை சார்ந்த, 250 ஏழை, எளிய பொதுமக்களுக்கும் தலா 5 கிலோ அரிசியும், தெங்கம்புதூர் பகுதியினை சார்ந்த, 60 ஏழை, எளிய பொதுமக்களுக்கும், தலா 5 கிலோ அரிசியினையும், 1 பாக்கெட் கோதுமை மாவினையும், பெத்தபெருமாள் குடியிருப்பு பகுதியினை சார்ந்த, 100 ஏழை, எளிய பொதுமக்களுக்கு, 5 கிலோ அரிசியினை தளவாய் சுந்தரம் வழங்கினார்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், 7-வது வார்டு அ.தி.மு.க சார்பாக, 6-ஆம் கட்டமாக 80 ஏழை, எளிய பொதுமக்களுக்கு, தலா 5 கிலோ அரிசியினை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், கிருஷ்ண குமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெசிம், அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், குலசேகரபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் சுடலையாண்டி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சண்முகவடிவு, மாநகர செயலாளர் ஜெய சந்திரன் (எ) சந்துரு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், அண்ணா தொழிற்சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×