search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைபடுத்தப்பட்ட பகுதி
    X
    தனிமைபடுத்தப்பட்ட பகுதி

    கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 600-ஆக அதிகரித்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்காக வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா? என்று விசாரித்து அதன் அடிப்படையில் அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள்.

    மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் நோயாளிகள் வசித்த வீடுகளை தடுப்புகளை அமைத்து அந்த பகுதிக்கு யாரும் வராத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டு வந்தனர்.

    ஆரம்பத்தில் அந்த தெருவின் இருபக்கங்களையும் அடைத்தனர். தற்போது அந்த வீட்டை சுற்றிலும் தடுப்பு அமைக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் 700 தெருக்கள் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகர தட்டியால் அடைப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

    கொரோனாவின் தாக்கம் கடந்த வாரம் குறையத் தொடங்கியதை அடுத்து கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 560 ஆக குறைந்தது.

    ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து இப்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 600 தாண்டி செல்கிறது.

    ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளின எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் மட்டுமின்றி நுங்கம்பாக்கத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தையும் கொரோனா வார்டாக பயன்படுத்தலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×