search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கை மீறி தி.மு.க.வினர் ஆலோசனை - பொன்முடி உள்பட 100 பேர் மீது வழக்கு

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது தடையை மீறி கூட்டம் நடத்தியதாக 5 பிரிவுகளின் கீழ் பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    விழுப்புரம்:

    அ.தி.மு.க. அரசின் முறைகேடுகளை மாவட்ட வாரியாக பட்டியலிட வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவித்தார்.

    அதன்படி விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தி.மு.க. வக்கீல்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது தடையை மீறி கூட்டம் நடத்தியதாக 5 பிரிவுகளின் கீழ் பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×