search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழுகை
    X
    தொழுகை

    ரம்ஜான் பண்டிகை- மதுரையில் முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை

    மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் தொழுகை ரத்து செய்யப்பட்டதால் அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் சேர்ந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
    மதுரை:

    நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் 2 மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகைகள் பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் நடைபெறவில்லை.

    ஒவ்வொரு ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது மதுரையில் அரசரடி ஈத்கா பள்ளிவாசல் திடல் மற்றும் தமுக்கம் மைதானத்தில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.

    முஸ்லிம்கள் இன்று அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நண்பர்கள் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பண்டிகை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். நண்பர்கள், உறவினர்களுக்கு முஸ்லிம்கள் பிரியாணி மற்றும் அசைவ உணவு வகைகளையும் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

    சிறப்பு தொழுகை நடத்தப்படாவிட்டாலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகம் குறையாமல் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×