search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்மாயில் தூர்வாரும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
    X
    கண்மாயில் தூர்வாரும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி

    கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி யூனியன் தீத்தாம்பட்டி கரிசல்குளம் கண்மாயில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கொடி அசைத்து கண்மாயில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கயத்தாறு யூனியன் காளாம்பட்டி பஞ்சாயத்து அழகப்பபுரம் கண்மாயில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கயத்தாறு யூனியன் புதுப்பட்டி-ஆவுடையம்மாள்புரம் இடையே ரூ.52 லட்சத்து 36 ஆயிரம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர், கயத்தாறு அருகே ஆத்திக்குளத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் 674 குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் வகையில், அவற்றை தன்னார்வலர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதனை, அங்குள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று தன்னார்வலர்கள் வழங்கினர்.

    கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, சீனிவாசன், சசிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார்கள் அய்யப்பன், திரவியம், வருவாய் ஆய்வாளர் காசிராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பஞ்சாயத்து தலைவி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×