search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இ-சேவை மையத்தில் டோக்கன் மூலம் இ-பாஸ் பெற வசதி

    இ-சேவை மையத்தில் டோக்கன் மூலம் இ-பாஸ் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டம் விட்டு வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.

    ஊரடங்கால் இ-சேவை மையங்கள் மூடப்பட்டது. இதனால் வருமானம், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் 9 தாலுகாக்களில் இ-சேவை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறை நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தினசரி 40 பேருக்கு டோக்கன் முறையில் இ-பாஸ் பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த பாஸ் பெற விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் வர வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பே மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×