search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் உள்ள 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை

    ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் இன்று 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கும் பட்சத்தில் நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வருபவர்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது.

    ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வருபவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். மயிலாடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலியானார்.

    ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் நேற்று காலையில் 25 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஆளூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இன்று காலை கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வார்டில் உள்ள 22 பேரையும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் இன்று 5 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கும் பட்சத்தில் நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

    மாவட்டம் முழுவதம் இதுவரை 11,091 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10,696 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 342 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 7,849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×