என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கத்திமுனையில் வழிப்பறி- மதுரையில் 2 ரவுடிகள் கைது
Byமாலை மலர்23 May 2020 2:32 PM IST (Updated: 23 May 2020 2:32 PM IST)
மதுரையில் சாலையில் நடந்து சென்றவரை கத்திமுனையில் வழிமறித்து பணத்தை திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 39). இவர் நேற்று சோலைஅழகுபுரம் வ.வு.சி. தெருவில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் கத்திமுனையில் வழிமறித்து ரூ. 1000 பணத்தை பிடுங்கி சென்றனர்.
இது தொடர்பாக பால் பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 30), சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியை சேர்ந்த பிச்சைமணி (வயது 24) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது 2 பேரும் பிரபல ரவுடிகள் என்பதும், இவர்கள் மீது மதுரை, சிவகங்கை மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×