search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    அதிமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சேலத்திற்கு வந்தார். இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கினார்.

    இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணம், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், பருவமழைக்கு முன்னதாக செய்ய வேண்டிய குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பிற்பகல் 2 மணி அளவில் எடப்பாடிக்கு செல்கிறார். அங்கு பயணியர் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். தொடர்ந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று தனது தாயை சந்திக்கிறார். இரவில் நெடுஞ்சாலை நகர் வீட்டிற்கு திரும்புகிறார்.

    நாளை (24-ந் தேதி) காலை அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் 2 மணி அளவில் காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இதையொட்டி அவர் செல்லும் பாதை மற்றும் அவரது வீட்டை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×