search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மும்பையில் இருந்து போலி இ-பாஸ் மூலம் தேனி வந்த 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்- 4 பேர் கைது

    மும்பை தாராவியில் இருந்து போலி இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தேனி வந்த 2 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணவாய் மலை பகுதியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இங்கு வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைபடுத்தப்படும் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

    மதுரையில் இருந்து தேனி மாவட்டம் நோக்கி நேற்று இரவு 2 ஆம்னி பஸ்கள் வந்தது. அந்த பஸ்களை மறித்து ஆவணங்களை போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது போலி இ-பாஸ் மூலம் அந்த பஸ்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவியில் இருந்து தலா 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு தேனி மாவட்டத்துக்கு வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து பஸ்சில் வந்த அனைத்து பயணிகளையும் போலீசார் தனிமைபடுத்தும் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அந்த 2 பஸ்களையும் பறிமுதல் செய்ததுடன் பஸ் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன் மற்றும் டிரைவர்கள் ராமையா, பிச்சை மணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    போலி இ-பாஸ் மூலம் இந்த 2 பஸ்களும் ஏற்கனவே ஒரு முறை மகாராஷ்டிராவுக்கு சென்று விட்டு தேனிக்கு திரும்பி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×