search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருதரப்பினரிடையே மோதல்
    X
    இருதரப்பினரிடையே மோதல்

    கீழ்பென்னாத்தூரில் இருதரப்பினரிடையே மோதல்- 2 பேருக்கு கத்திகுத்து

    கீழ்பென்னாத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து கடையடைப்பு மற்றும், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் மிஷின் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). அண்ணா தெருவை சேர்ந்தவர் வினோத் (27). இருவரும் நண்பர்கள். இருவரும் நேற்று மாலை கீழ்பென்னாத்தூர் குளத்துமேட்டில் அமாந்து கொண்டு மது குடித்தனர்.

    சுபாஷ் மற்றும் வினோத் இருவரும் மது போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆசைதம்பி (25), இருவரிடமும் தகராறு செய்தார். ஆசைதம்பியின் கூட்டாளிகள் 6 பேர் அங்கு வந்து சுபாஷ், வினோத் அகியோரை கத்தியால் குத்தினர். அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து ஆசைதம்பி மற்றும் 6 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றது. உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு இருவரையும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படனர். வினோத்துக்கு தலையில் காயம் எற்பட்டது.

    சுபாஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சுபாஷ் என்பருக்கு கை, கால் இரண்டு இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் வெட்டு விழுந்ததில் கை முறிந்து தொங்கியபடி இருந்தது.

    தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, விநாயகமூர்த்தி, கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கீழ்பென்னாத்தூரில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

    கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கீழ்பென்னாத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு சமரசம் செய்தார். அதைதொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    Next Story
    ×