search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    சாத்தூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு

    சாத்தூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் 8 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அம்மா உணவகங்களில் 23.4.2020 முதல் 31.5.2020 வரை 39 நாட்களுக்கு 3 வேளைகளிலும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் வழங்கி உள்ளார்.

    இந்த அம்மா உணவகங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சுகாதாரம், சமூக இடைவெளி, சமையல் முறைகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பொது மக்களிடம் உணவு வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தார்.

    அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றி பணியாற்றவும் அம்மா உணவகத்திற்கு உணவு வாங்க வருகை தரும் ஏழை-எளிய பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கண்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, நகர செயலாளர் வாசன், நகர இளைஞரணி செயலாளர் இளங்கோவன், கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணன், முனீஸ், லோகையாசாமி, மதுரை ஏர்போர்ட் அத்தா ரிட்டி கமிட்டி உறுப்பினர் கதிரவன், மறவர் மகாஜன சங்க தலைவர் முருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×