search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ பரிசோதனை
    X
    மருத்துவ பரிசோதனை

    திருச்சி திரும்பிய 328 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

    டெல்லி மாநாட்டில் பங்கேற்று திருச்சி திரும்பிய 328 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
    திருச்சி:

    டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இஸ்லாமியர்களின் தப்லீக் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    700 பேர் டெல்லியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குணமடைந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுடெல்லியில் இருந்து திருச்சிக்கு கடந்த 18-ந்தேதி சிறப்பு ரெயிலில் 328 பேர் வந்தனர். 19 மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்ததால், திருச்சி அரபிக்கல்லூரியில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி கோவையை சேர்ந்த 16 பேர், தருமபுரியை சேர்ந்த ஒருவர், திண்டுக்கல் -54, ஈரோடு-16, மதுரை-27, நாகப்பட்டினம்-7, கரூர், பெரம்பலூர் தலா ஒருவர், நாமக்கல்-21, நீலகிரி-2, புதுக்கோட்டை-11, ராமநாதபுரம்-15, சேலம்-44, சிவகங்கை-5, தஞ்சை-15, தேனி- 12, திருப்பூர்-22, திருவாரூர்-15, திருச்சி-43 பேர் என மொத்தம் 328 பேரும் அவரவர் ஊர்களுக்கு 7 அரசு பஸ்கள் மூலம் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வீடுகளுக்கு சென்றதும் தொடர்ந்து 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×